Sunday 24 August 2014

பேபால் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி

பேபால் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா?


பேபால் ஆன்லைனில் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் பயன்படும் உலகின் முதன்மையான பணபரிமாற்றதளம்.பழைய காசோலைகளுக்கும் வரைவோலைகளுக்கும், பணவிடைகளுக்கும் மாற்றாக டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்ய உதவும் இ-காமர்ஸ் நிறுவனமே பேபால்.இந்நிறுவனம் 2000 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.2002 ஆம் ஆண்டு இ-பேயின் துணை நிறுவனமாக (Subsidiary) மாறியது. பேபால் நிறுவனத்தின் சர்வதேச தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. நமது இந்திய நாட்டில் சென்னை மற்றும் பெங்களூருவில் பேபால் தலைமையகங்கள் செயல்படுகின்றன.

பேபால் சிறப்பம்சங்கள்

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பேபால் பணபரிமாற்ற சேவையை பயன்படுத்துகிறார்கள்.
இந்நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்த 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
உலகில் உள்ள 25 நாடுகளின் நாணய மதிபபுகளில் உடனடியாக பணம் அனுப்பவும் பெறவும் முடியும் என்பதே பேபால் பணபரிமாற்ற தளத்தின் தனி சிறப்பு. ( உதாரணத்திற்கு இந்திய ரூபாய் ,  அமெரிக்க டாலர் போன்று )
பாதுகாப்பான பணபரிமாற்ற சேவைக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது பேபால் நிறுவனம்.

பேபால் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி


குறிப்பு : நமது இந்திய நாட்டில் பேபால் உறுப்பினர் கணக்கு துவங்க உங்களிடம் கட்டாயம் பான் கார்டு (Pan Card ) இருக்க வேண்டும்.
.

வழிமுறை இரண்டு 



வழிமுறை மூன்று 

வழிமுறை நான்கு 



பேபால் உறுப்பினர் கணக்கு துவங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
1.E-Mail address:பேபால் பணபரிமாற்ற தளத்தில் உங்களின் ஈமெயில் முகவரியே உறுப்பினர் கணக்காக செயல்படுகிறது

அடுத்து பாஸ்வேர்டு கொடுத்து விட்டு, அப்படியே நினைவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
2 & 3 ஆகிய நம்பர் கொடுத்துள்ள இடம் மிக முக்கியம். வெளிநாட்டினர்  என்றால் first name, middle name, last name என பெயரை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால், நாம் பெயர் & அப்பா இனிசியல் ஆகிய இரண்டைத்தான் பெயராக  பயன்படுத்துகிறோம்,  ஆகையால் 2- குறிப்பிட்டுள்ள இடத்தில் உங்களின்  முழுப் பெயர் (எ.கா : என்னுடைய பெயர் Jayakanthan) , அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம். 3 குறிப்பிட்டுள்ள கட்டத்தில், அதாவது last name -ஆக உங்களது இனிசியலைக் கொடுங்கள் (எ.கா: G ).
இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் நீங்கள் உறுப்பினர் கணக்கு துவங்கும் பெயரில்  உங்களுக்கு நமது நாட்டில்  ஒர் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யாருடைய  பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ! அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். உங்களது தந்தைக்குத்தான் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அவரது பெயரிலேயே தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை பேபாலுடன் இணைக்கும் பொழுது, பேபாலில் கொடுத்துள்ள பெயரும் – நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால், நிச்சயமாக பணத்தினைப் பெற முடியாது.
அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைக் கொடுங்கள்.
4 உங்களின்  PAN கார்டு நம்பரை உள்ளீடு செய்யுங்கள் . உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன், இல்லாவிடில் ஒர் 350 ரூபாய் செலவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குக்கிறீர்களோ, அவரது பெயரில் பான்  கார்டு இருக்க வேண்டும்.ஆன்லைனிலும் பான் கார்டு விண்ணப்பம் செய்யலாம் இதற்காக ஆகும் செலவு வெறும் 96 ரூபாய் மட்டுமே.
அடுத்து, உங்களது வீட்டு முகவரி மற்றும் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & create a account என்றுள்ளப் பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
உங்களின் மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்து கொள்ள  ஒரு VERIFICATION LINK அனுப்பப்படும் அந்த லிங்கில் கிளிக் செய்து உங்களது பேபால் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்யவும்.

பேபால் இல் VERIFIED செய்யப்பட்ட உறுப்பினர் கணக்கு இருந்தால்தான்  இந்திய வங்கிகளுக்கு பணம் பெற முடியும். அதற்கு கட்டாயம் இரண்டு செயல்களை செய்ய வேண்டும்.
.1. purpose code ( நோக்க குறியீட்டு எண் ) 2. Bank account details ( வங்கி உறுப்பினர் விவரங்கள் )
ptc இணையதளங்களில் பணம் சம்பாதிப்பவர் எனில் நீங்கள் (Advertising and market research) என்ற purpose code ஐ   தேர்வு செய்யவும். பின்வரும் படத்தில் நீங்களே காணலாம்.
 
 
Purpose Code தேர்வு செய்த பிறகு
 
STEP 5

பேபால் பணபரிமாற்ற தளத்தில் இந்திய வங்கி கணக்கை இணைப்பது எப்படி 

 

உங்களது பேபால் உறுப்பினர் கணக்கை verified செய்துகொள்ள select 
profile and then Add Bank Account என்பதை தேர்வு செய்யவும் 
 
STEP 6

STEP 7

Name On Account:  உங்களின் பேபால்  கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெயராக இருக்க வேண்டும்.

Bank Name: அடுத்து பேங்க் நேம் (State Bank of India/Indian Bank/ICICI)
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது., இந்தத் வலைப்பூவில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.
http://www.bankifsc.com/உதாரணத்திற்கு பூர்த்தி செய்யபட்ட படிவம் பின்வருமாறு இருக்கும் 


STEP 8
பேபால் நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2  பணப் பரிவர்த்னைகளை நிகழ்த்தும்.  அந்தப் பரிவர்த்னைகளின் பண மதிப்பு என்ன என்பதை  2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும்.  அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுத்தால் உங்களின் பேபால் உறுப்பினர் கணக்கு சரிபார்க்கப்பட்டு விடும்

Verified செய்யப்பட்ட பேபால் உறுப்பினர் கணக்கு பின்வருமாறு இருக்கும்

பேபால் பணபரிமாற்ற தளத்திலிருந்து இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி?



உங்களின் பேபால் உறுப்பினர் கணக்கில் குறைந்தபட்சம் 10 $ அமெரிக்க டாலர் பணம் உள்ளது என்று வைத்துகொள்வோம். உங்களின் பேபால் கணக்கு Verified  செய்யப்பட்டதாக இருந்தால்,இந்திய வங்கிகளுக்கு பணம் பெற  நீங்கள் பேபால் பணபரிமாற்ற தளத்தில்  லாகின்  செய்ய வேண்டிய அவசியம் கூட கிடையாது.பேபால் பணபரிமாற்ற நிறுவனமே அன்றைய தேதியில் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பில் Convert செய்து உங்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விடுவார்கள்.இது நமது நாட்டின்  ரிசர்வ் வங்கி பேபால் பண பரிமாற்ற தளத்திற்கு இட்ட கட்டளையும் கூட .நமது இந்திய நாட்டு வங்கிகளுக்கு பணம் வந்து சேர குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் முதல் அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை ஆகும்.

1 comment:

  1. Thank you for such an innovative post it is useful and I wish lots of creative post from your side. How to find IFSC code?
    Electronic funds transfer in India is eased by an alpha-numeric IFSC full form called the Indian financial system code (IFSC Code or IFSC). This code exclusively recognizes every bank branch which engages within the two main settlement and payment systems in India, specifically, National Electronic Funds Transfer (NEFT) and Actual -Time Gross Settlement (RTGS).

    ReplyDelete